ரஜினிக்கு ஏழரை சனியாச்சே | விடியோ | Oneindia tamil

2017-12-23 4,901

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பேச்சு மீண்டும் ஆரம்பித்து விட்டது. ரஜினிகாந்திக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது. அவரது அரசியல் பயணம் சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார். டிசம்பர் 26 முதல் 31 வரையிலான நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் ரஜினியே அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் மகர ராசி, திருவோணம் நட்சத்திரம் இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் ஏழரை சனி தொடங்கியுள்ளது. அவர் அரசியலுக்கு வருவதற்கு இது சரியான சமயம்தானா என்று பலரும் கேட்கின்றனர்.கேரளாவில் இருக்கும் ஜோதிடர் ஒருவரிடம், ரஜினிக்காக அவரது நண்பர் ஒருவர் ஜாதகம் பார்த்திருக்கிறார். ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நல்ல நேரம் வந்தாச்சு. இனி எந்த நாளில் அவர் அரசியல் கட்சித் தொடங்கினாலும், அவர் நினைத்தது நடக்கும். தமிழக முதல்வராக வலம் வரக்கூடிய யோகம் அவருக்கு இருக்கிறது என்று அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.

ரஜினிகாந்துக்கு கடந்த 19 வருடங்களாக சனி தசை நடந்தது. அவருக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. 2018 ஜனவரி 21 தேதியுடன், ரஜினிகாந்த்துக்கு சனி திசை முடிவடைகிறது. பிறகு புதன் திசை ஆரம்பமாகிறது. ரஜினி ராசிப்படி, புதன்திசையில் கல்வி, ஞானம் தொடர்பான விஷயங்களில் இயல்பாக ஆர்வம் ஏற்படும். இந்த நாட்டம் அரசியலுக்கு கொண்டுவர வாய்ப்புள்ளது. கல்வி தொடர்பான உதவிகளை மக்களுக்கு அவர் செய்வார்.

ரஜினி அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்பதைத்தான் அவரின் ஜாதகம் சொல்கிறது. தனிக்கட்சி தொடங்கத்தான் வாய்ப்பு அதிகம். 69 வயது 6 மாதங்களுக்குள் ரஜினியின் அரசியல் பிரவேசம் இருக்கும். அப்படி அவர் அரசியலுக்கு வந்தாலும், எல்லாமே வெற்றிதான் என்று கூறியுள்ளார். மற்றொரு ஜோதிடர்.



Rajinikanth's Prediction This is the best period for Rajinikanth to travel. Just let go and enjoy the happiness that comes Rajinikanth's way. At last Rajinikanth can relax and enjoy the success and the results of the hard work Rajinikanth had been doing for a long time.

Videos similaires